சென்னை: எண்ணூர் நெடுஞ்சாலை, IOC இரயில்வே கேட் அருகில் பப்புகுமார், வ/25, தண்டையார்பேட்டை என்பவர் 23.06.2021 அன்று நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பப்புகுமாரின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து பப்புகுமார் H6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
H6 ஆர்.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முகமது யூசுப், 22 தண்டையார்பேட்டை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் மீட்கப்பட்டது. மேலும் மேற்படி குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.















