சென்னை: சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மரியநேசன் 74. என்பவர், கடந்த 11.10.2021 அன்று மதியம் கொடுங்கையூர், E.B அலுவலகத்தின் பின்புறம் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது,
அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மரியநேசனின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
மேற்படி சம்பவம் குறித்து மரியநேசன் P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
P-6 கொடுங்கையூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து,
மேற்படி செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 1) கோபிநாத் 25. எருக்கஞ்சேரி 2) சரவணன் (எ) மாடு சரவணன் 32. பட்டாபிராம் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்