சென்னை: சென்னை வடமலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன், வ/32, என்பவர் வேலை முடித்து 7.6.2021 அன்று இரவு நசரத்பேட்டை, சோபன்பாபு தோட்டம் அருகில் நின்று கொண்டு செல்போன் பேசி கொண்டிருந்த போது,
இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஜனார்த்தனனிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது தொடர்பாக ஜனார்த்தனன் T16 நசரத்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
T16 நசரத்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட அஜித்குமார் (எ) புல்லட் அஜித், வ/27 திருவேற்காடு என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.