சென்னை:புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுந்தர், வ/17, என்பவர் 29.05.2021 அன்று இரவு 9.45 மணியளவில் அவரது நண்பருடன் சுந்தரம் மெயின் ரோடு, பச்சையம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 நபர்கள், இருவரையும் வழிமறித்து மிரட்டி கட்டையால் தாக்கி அவர்களிடமிருந்து 2 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற சம்பவம் குறித்து, சுந்தர் P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது
P-3 வியாசர்பாடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு, செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 1.கோகுலகிருஷ்ணன்,வ/19, வியாசர்பாடி 2. தயாள்ராஜ், வ/20, வியாசர்பாடி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
2 செல்போன்களுடன் தலைமறைவாகியுள்ள குற்றவாளி ஸ்பீடு என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.