கோவை, இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் கோகுல் (21). இவர் நேற்று முன்தினம் கிணத்துக்கடவுக்கு சென்றிருந்த கோகுல் போத்தனூர் அடுத்த சாரதா மில் சாலையில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பின் முன்பு வந்து கொண்டிருந்தார்.
அந்தப் பகுதியில் திடீரென கோகுலை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி கோகுலிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர் .
இது குறித்து கோகுல் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார் .புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து கோகுலிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்ற வாலிபர்கள் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சந்திரன் என்பவரின் மகன் ஹரிஹரன் என்கிற ஹரி
(24) மற்றும் குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜலீல் என்பவரின் மகன் இஸ்மாயில் (22 )என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்