கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் ஓசூர் பூ மார்க்கெட் தீச்சி ஓட்டல் முன்பு சர்வீஸ் ரோட்டில் அஸ்லாம் என்பவர் தனது ஆட்டோவை ஆட்டோ ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு வாடகைக்காக 27.12.2021 ஆம் தேதி இரவு நின்றுகொண்டு செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தபோது.
அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் தன் கையிலிருந்த செல்போனை பிடுங்கிக்கொண்டு சென்றுவிட்டதாக அஸ்லாம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து 28.12.2021 ஆம் தேதி மூன்று நபர்களை கைது செய்து, செல்போன் பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.