கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய பகுதியில் கெம்பே கௌடா நகர் சின்ன எலசகிரி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் 26.12.2021 ஆம் தேதி மதியம் வீட்டில் இருந்தபோது உடன் படிக்கும் நண்பன் முக்கியமான வேலை இருப்பதால் மகேஷின் இருசக்கர வாகனத்தில் தன்னைக் கூட்டிக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டதால் மகேஷ் தன்னுடைய இருசக்கரவாகனத்தில் நண்பனை அழைத்துக்கொண்டு நல்லூர் ரோடு சக்தி நகர் எதிரில் உள்ள தைலந்தோப்பிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த மூன்று நபர்களிடம் சென்ற போது அவர்கள் மகேஷிடம் செலவிற்கு பணம் கொடு என்று கேட்டதற்கு இல்லை என்று கூறியதால்.
மகேஷிடம் இருந்த செல்போன் விற்று செலவு செய்வோம் என கூறி இரண்டு செல்போன்களை பிடிக்கிய போது தரமாட்டேன் என கூறியதற்கு தைலமரக்கட்டையை எடுத்து தலையில் அடித்து காயப்படுத்தி தன்னிடமிருந்த இரண்டு செல்போன்களை பிடுங்கிக்கொண்டு நான்கு பேரும் ஓடிவிட்டதாக மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து 27.12.2021 ஆம் தேதி மூன்று நபர்களை கைது செய்து, குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.