கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் பரத் என்பவர் (19.10.2022), ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு ஓசூர் ரிங்ரோடு முனிஸ்வர் நகரில் உள்ள Repose பெட் கடை அருகே நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த நபர் பரத்தின் சட்டை பையில் வைத்துள்ள செல்போனை கொடு என மிரட்டி பறித்து சென்றதாக பரத் ஓசூர் டவுன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து செல்போனை பறித்து சென்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.