சென்னை: பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த ஆஷிக் பாஷா, வ/28, என்பவர் கடந்த 2.6.2021 அன்று இரவு வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் பேட்ரோல் பங்க் அருகே செல்போனில் பேசியபடியே வாக்கிங் சென்று கொண்டிருந்த போது,
அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், ஆஷிக்பாஷாவிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றபோது, ஆஷிக் பாஷா இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து வைத்துக்கொண்டு S10 பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
S10 பள்ளிக்கரணை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து,
செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 1.ஜேம்ஸ், வ/20, சின்ன கோவிலம்பாக்கம் 2.கனகதர்ஷன், வ/19, கோவிலம்பாக்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.