கோவை: முகமது கான் என்பவரின் மகன் அஷ்ரப் கான்( 27) .இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே நடந்து சென்றபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த வாலிபர்கள் இருவர் அஷ்ரப் கான் பேசிக்கொண்டிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது அஷ்ரப் கான் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற வாலிபர்களை துரத்தி பிடித்தார்.
பின்னர் அவர்களை சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் கோவில் மேடு பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் கார்த்திக்
என்கிற திருட்டு கார்த்திக் (20) மற்றும் இடையர்பாளையம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் புகழேந்தி (22)என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்