சென்னை: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இம்ரான், வ/20, என்பவர் கடந்த 29.04.2021 அன்று புளியந்தோப்பு ஆட்டு தொட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த நபர், மேற்படி இம்ரானின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்து இம்ரான் P-1 புளியந்தோப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
P-1 புளியந்தோப்பு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அறுப்பு அப்பு (எ) சபரி, வ/30, புளியந்தோப்பு என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 9 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்மீது நிதீமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.