தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் பேச்சிபழம் (47), என்பவர் கடந்த (03.11.2022) அன்று கீழ கூட்டுடன்காடு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் பேச்சிபழத்திடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்தபோது, பேச்சிபழம் செல்போனை கொடுக்காததால் அவரை கையால் தாக்கி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து பேச்சிபழம் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கீழ கூட்டுடன்காடு ராஜீவ் நகரை சேர்ந்த சரவணன் மகன் பாலா (எ) பாலமுருகன் (23) என்பவர் மேற்படி பேச்சிபழத்திடம் செல்போன் பறிக்க முயற்சி செய்து அவரை தாக்கியதும் தெரியவந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வின்சென்ட் அன்பரசி, வழக்கு பதிவு செய்து குற்றவாளி பாலா (எ) பானமுருகனை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து செல்போன் பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.