திருவாரூர்: திருத்துறைப்பூண்டி ரயில்வே நிலையம் அருகே ஓய்வில் இருந்த நபரின் சட்டை பையிலிருந்து செல்போனை திருடி சென்ற – திருத்துறைப்பூண்டி, குட்செட் தெருவை சேர்ந்த 1. பாலசுப்ரமணியன் மகன் பாரத் (வயது-27). 2. குமார் மகன் மணிமாறன் (வயது-28). 3. கண்ணன் மகன் சாய்குமார் (வயது-18). ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேற்கண்ட நபர்கள் திருடி சென்ற செல்போன் (Tecon park phone) -1 பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துகுமார் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தி திருட்டு, வழிப்பறி, ரௌடிசம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.