திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியிலிருந்த மருத்துவரின் செல்போனை திருடி சென்ற – 1. திருத்துறைப்பூண்டி பெரிய சிங்களாந்தி தெருவை சேர்ந்த நாகூறான் மகன் துபேத்திரன் (வயது-49). கைது செய்யப்பட்டு திருடி சென்ற Apple i phone-1பறிமுதல். திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் அருகில் செல்போன் திருட முயற்சி செய்த- 2.மன்னார்குடி பட்டக்கார தெருவை சேர்ந்த மதியழகன் மகன் சற்குணம் (வயது- 28).என்பவர் கைது செய்யப்பட்டதில், விற்பனைக்காக 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் மீது கஞ்சா வழக்குகள் – 4, வழிப்பறி வழக்குகள் – 2 நிலுவையில் உள்ளது.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்த திருத்துறைப்பூண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துகுமார் மற்றும் காவலர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களை அச்சுறுத்தி திருட்டு, வழிப்பறி, ரௌடிசம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.