கோவை: கோவை சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் அலாய் கம்பனியில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தங்கி பணி செய்கின்ற ஆகஸ்டியன் மற்றும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களின் 10 செல்போன்கள் மற்றும் 10ஆயிரம் ரூபாய் பணத்தை நேற்று முன்தினம் யாரோ திருடி சென்று விட்டதாக நேற்று சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் . திரு.முருகேசன் தலைமையில் எஸ்.ஐ. திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் காவலர்கள் திரு.செல்லபாண்டி மற்றும் திரு.பழனிகுமார் ஆகியோர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்.
ஹேமந்த குமார்மாலிக், பிரதாப் மாலிக் ,ராஜேஸ் மாலுக் , மானஸ் மாலிக் ஆகிய நான்கு பேரையும் சிந்தமணிபுதூர் பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில்.
குற்றவாளிகளிடமிருந்த 10 ஆன்ராய்டு மொபைல்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.