சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தில் தனியார் நிலத்தில் நிறுவப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்புடைய செல்போன் கோபுரத்தை போலி ஆவணங்களை காட்டி ஒரு கும்பல் இராட்சத கிரேன் மூலம் கழட்டி கடந்த மாதம் 27″ ஆம் தேதி திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து தனியார் செல்போன் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை காவல்துறையினர் ,தேடி வந்தனர்.
காவல்துறையினர் , நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நாகமுத்து, வாழப்பாடியை சேர்ந்த ராகேஷ் ஷர்மா, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சண்முகம், ஆகிய மூவரையும் காவல்துறையினர் ,கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இவர்கள் விற்பனை செய்த 10 டன் எடையுடைய செல்போன் டவர் பாகங்களையும்காவல்துறையினர் ,மீட்டனர்