தூத்துக்குடி : தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் நேற்று (25.11.2022), தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மேற்படி இளஞ்சிறார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மகபூப் பாட்ஷா மகன் பஷீர் (24) மற்றும் தூத்துக்குடி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மகன் மாடசாமி (21) ஆகிய 2 பேரும் மேற்படி இளஞ்சிறாரிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம், குற்றவாளிகளான பஷீர் மற்றும் மாடசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 30,000/- மதிப்புள்ள செல்போனையும் பறிமுதல் செய்தார்.