திருவாரூர் : திருவாரூர் TNCSC வாட்ச்மேனை மிரட்டி பணம் ரூபாய் 200/- மற்றும் செல்போனை பறித்து சென்ற திருவாரூர், வன்மீகபுரம் பகுதியை சேர்ந்த நாகையன் மகன் ராம்பிரசாத் மற்றும் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் கண்ணன் ஆகிய இரண்டு HS குற்றவாளிகள் கைது. மேலும், இவர்கள் இருவர் மீதும் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி மற்றும் கொள்ளை போன்ற பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri)* அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.