தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் திரு.கவின்குமார் டெல்லியில் இரண்டாம் நிலை போலீசாக பணிபுரிந்து வருகிறார் இவர் தனது மனைவி பிரசவத்திற்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அங்குள்ள பார்வையாளர் ஓய்வு அறையில் திரு.கவின்குமார் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அப்போது அருகில் வந்து அமர்ந்த ஒரு நபர் அவர் செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திரு.கவின்குமார் சத்தம் போட்டார் மருத்துவமனை வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அந்த நபரை விரட்டிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து போலீசார் சாக்ரடீஸ் வயது 43 என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.