அரியலூர் : அரியலூரில் சாலையில் கிடந்த ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை, அவ்வழியே சென்ற அரியலூர் கிளைச்சிறை கண்காணிப்பாளர் திரு.பாண்டியன் அவர்கள் அரியலூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்து செல்போன் உரிமையாளரை கண்டுபிடித்து அளிக்குமாறு கூறினார். அதனைத் தொடர்ந்து அரியலூர் நகர காவல்நிலைய காவலர்கள் செல்போன் உரிமையாளரை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தனர். செல்போனை பெற்றுக்கொண்ட உரிமையாளர் கிளைச் சிறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் அரியலூர் மாவட்ட காவல்துறைக்கும் நன்றிகளை தெரிவித்தார்.