பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணியன் அவர்களின் தலைமையில் சைபர் கிரைம் காவல் நிலையம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் மேற்படி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தன்னுடைய செல்போனை காணவில்லை என இரண்டு நபர்கள் புகார் அளித்தார்கள். அந்த புகாரை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு தொழில்நுட்ப உதவியுடன் காணாமல் போன இரண்டு செல்போன்களையும் கண்டு பிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்ரமணியன் அவர்கள் கூறுகையில் தற்போது இணையதள மோசடி மற்றும் திருட்டு அதிகமாக நடை பெறுகிறது. இதனை தடுக்க பொதுமக்களால் மட்டுமே முடியும்.
இணைய தளத்தில் உங்களது ஆசையை தூண்ட சில சலுகைகளை கொடுத்து உங்களது வங்கி கணக்கு மற்றும் சுய விபரங்களை பெற்றுக் கொண்டு இணையதளத்தில் மோசடியை அரங்கேற்றுகிறார்கள். எனவே மக்களாகிய நாம் தான் இணைய தளத்தை பயன்படுத்தும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை