கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் செல்போனில் சீரியல் பார்த்துக் கொண்டும் பைக் ஓட்டும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அதில் பதிவாகி இருந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தினார்கள் .அதில் அவர் ரத்தினபுரிகண்ணப்பன் நகரை சேர்ந்த முத்துசாமி 35 என்பதுதெரியவந்தது.
இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.. அவர் தனது மோட்டார் சைக்கிளில் ஹெட்லைட் மேல் தனியாக செல்போன் ஸ்டாண்ட் அமைத்து அதில் செல்போன் வைத்துக்கொண்டு சீரியல் மற்றும் சினிமா பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டுவாராம்.
இதையடுத்து போலீசார் அவர் மீது வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்போன் பேசுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.அவருக்கு ரூ 1 200 அபராதம் விதிக்கப்பட்டது.