திருவண்ணாமலை:கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த தடை விதித்து இருந்தது.
இந்து முன்னணி நகர தலைவர் மோகன்ராஜ் தலைமையில் தடையை மீறிவிநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டதாக, கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.