சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, H-1 வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் (சட்டம் ஒழுங்கு) அவர்களின் தலைமையிலான காவல் குழுவினர் 25.9.2020 அன்று அதிகாலை சுமார் 03.00 மணியளவில் வண்ணாரப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது கத்தி மற்றும் இரும்பு கம்பிகளுடன் சுற்றி திரிந்த 4 நபர்கள் விஜய் (19), டேனி (எ) ராஜேஷ் (21), பங்க் (எ) தினேஷ் (21) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். அவர்கள் செய்யவிருந்த குற்றம் சென்னை போலீசாரால் உரியநேரத்தில் தடுக்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
