திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு என்பவர் நேற்று இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குண்டர்கள் தம்மை பின் தொடர்வதாக காவல்துறையினருக்கு செய்தியாளர் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்த காவல்துறையை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பாக செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களை கைது செய்ய வேண்டும், பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முதலமைச்சர் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முடிவில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை செய்தியாளர்கள் அளித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு