விருதுநகர் : விருதுநகர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து விருதுநகர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு.முத்திருளப்பன், தலைமை காவலர் திரு.அழகுமுருகன், முதல் நிலைக் காவலர்கள் திரு.பிரபு, திரு.சிவக்குமார், திரு.பாண்டியராஜன், மற்றும் திரு.முத்து அய்யனார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடித்து கைது செய்து விசாரனை செய்ததில் அவர்கள் விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர், பேரையூர், திருமங்கலம், திருப்பறங்குன்றம் ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டு, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, திருட்டு நகைகளை விற்பதற்கு உடந்தையாக இருந்த நபரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த செயலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் IPS., அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.