மன்னார்குடி நகர காவல் சரகம், மன்னார்குடி கீழ முதல்தெருவில்
வசித்துவரும் மாரியம்மாள் 60 என்பவர் கடந்த 22.10.21 அன்று மாலை
தனது வீட்டிலிருந்தபோது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாரியம்மாளை அரிவாளால் வெட்டி காயப்படுத்தி அவர் அணிந்திருந்த 3.5 சவரன் தங்க செயினை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS
அவர்கள் உடன் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்கள்.
மேற்படி சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது நேரடி பார்வையில் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மேற்படி குற்றச்சம்பவத்தில் 1) கார்த்தி 26. மீனாட்சி அம்மன்கோவில் தெரு மன்னார்குடி என்பவரும் அவருக்கு உதவியாக
2) ராணி 37. கீழமுதல்தெரு மன்னார்குடி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
மேற்படி இருவரையும் தனிப்படையினர் இன்று (24.10.21)
கைது செய்து மேற்படி 3.5 சவரன் தங்க செயினை பறிமுதல்செய்து குற்றவாளிகள் இருவர்மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
குற்றவழக்கில் விரைந்து செயல்பட்டுகுற்றவாளிகளை கைது செய்து பறிபோன செயினை மீட்டு சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினர் மற்றும் மன்னார்குடி உட்கோட்ட குற்றத்தடுப்பு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா
திருவாரூர் மாவட்ட காவல்துறை