கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 06.10.2019 அன்று ஆளூர் பகுதியை சேர்ந்தவர் ராஜம்(55) இவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்தில் இருந்தார். அப்போது அவருடைய கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை 3 பெண்கள் திருடிவிட்டு தப்பி செல்ல முயன்றனர்.
உடனே ராஜம் கூச்சலிட பொது மக்கள் 3 பெண்களையும் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் சென்னையை சேர்ந்த தேன்மொழி(35), கார்த்திகா(30), ஆர்த்தி(37), என்பதும் அவர்கள் பல இடங்களில் இதே முறையில் திருடியது தெரியவந்தது. உடனே கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சுந்தர் மூர்த்தி அவர்கள் 3 பேரையும் கைது செய்து u/s 379 IPC படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.