பெரம்பலூர் : வெங்கடேசபுரத்திலுள்ள அற்புதா மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக கொளத்தூரைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி கலையரசி(22) இன்று காலை வந்தார். 9 மாத கர்ப்பிணியான கலையரசி கழிவறைக்குச் சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து சென்ற ஒரு பெண் அவர் முகத்தில் மிளகாய்பொடியை தூவி அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயினை பறித்துள்ளார். கலையரசி சப்தமிட்டதால் மருத்துவமனையில் இருந்தவர்கள் ஓடிவந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து பெரம்பலூர் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்ட அந்த பெண், குன்னம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜீவ்காந்தி மனைவி பிரியா(23) என தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு பிரியாவை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.