சென்னை: சென்னை SRMC சரக காவல் உதவி ஆணையர் திரு. பழனி, தலைமையில் ஸ்ரீ முத்துக்குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 17.09.2021 ஆம் தேதி பகல் மணி 12 மணி அளவில் கல்லூரி முதல்வர் திருமதி. சாந்தா, துணை முதல்வர் திரு இந்திரஜித், T-14 மாங்காடு காவல் ஆய்வாளர் திரு.தியாகராஜன் முன்னிலையில் COVID-19, Cyber Crime, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வண்ணம் அறிவுரைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் தொடர்பாக கடந்த ஆண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது.
அந்த வகையில், இந்தியாவில் 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் குறித்த தகவல்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டது.
அதன்படி கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக மொத்தம் 3,71,503 வழக்குகள் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது முந்தைய ஆண்டை (4,05,236) விட குறைவு ஆகும். கடந்த ஆண்டில் பதியப்பட்ட பெண்களுக்கு எதிரான மொத்த வழக்குகளில் கற்பழிப்பு சம்பவங்கள் மட்டுமே 27,046 ஆகும். இதில் பாதிக்கப்பட்ட 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும், 2,655 பேர் சிறுமிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா