சென்னை : வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தால் சாட்சிகள் பல்டி, குற்றவாளிகள் தலைமறைவு அதிகரிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புதிய வழக்குகளில் கூட சாட்சிகள் பல்டி அடித்து வரும் நிலையில் பழைய வழக்கில் சாட்சி சொல்ல எப்படி வருவர்?
மேலும் பழைய வழக்குகள் நிலுவையில் இருந்தால் எப்படி தண்டனை கொடுக்கப் போகிறீர்கள்? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலுள்ள கொலை வழக்குகள் எத்தனை? ஜனவரி 25ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.