சென்னை: சென்னையில் தீபாவளியன்று உச்ச நீதிமன்றம் வரையறுத்த விதிகள் மீறியதாக மொத்தம் 354 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைந்தகரை பகுதியில் பட்டாசு கடை உரிமையாளரை தாக்கி பணம் மற்றும் செல்போன் பறித்த வழக்கில் சரித்திரப்பதிவேடு குற்றவாளி உட்பட 3 நபர்கள் கைது.
மீன்பிடி துறைமுகம் பகுதியில் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த வழக்கில் சுனில் என்பவர் கைது.
எஸ்பிளனேடு பகுதியில் பெண்ணை காதலிக்க சொல்லி வற்புறுத்தி தாக்கிய சரித்திரப்பதிவேடு குற்றவாளி எஸ்பிளனேடு காவல் குழுவினரால் கைது.
வியாசர்பாடி பகுதியில் வீண்தகராறு செய்து ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய வழக்கில் 2 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் உட்பட 5 நபர்கள் கைது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா