சென்னை: சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது. 1.275 கிலோ கஞ்சா பறிமுதல்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது.
2015ம் ஆண்டு மாதவரம் பகுதியில் கார்த்திக் என்பவரை, கடத்திய வழக்கில் ஏற்கனவே 2 நபர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேற்படி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தவர் கைது.
விருகம்பாக்கத்தில் 70 வயது மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறித்துச் சென்றவர் கைது.
நன்னடத்தை பிணை ஆவணத்தை மீறிய மயிலாப்பூர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.
ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் மெட்ரோ ரயில் பணியை முன்னிட்டு 08.10.2022ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்கள்.
தீபாவளி பண்டிகையையொட்டி 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா