சென்னை: சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர்களின் நலனை போற்றும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு நலத்திட்டங்கள் காவல் ஆளிநர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் ஆயுதப்படை பெண் காவலர்களுக்கு புத்தாக்க பயிற்சியளிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டதின் பேரில் பெண் காவலர்களுக்காக (Women Empowerment Refreshing Training Programme) சிறப்பு புத்தாக்க பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
எழும்பூர், டான்பாஸ்கோ மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற ஆயுதப்படை பெண்காவலர்களுக்கான, புத்தாக்க பயிற்சி முகாமை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றி பெண் காவலர்கள் பணியில் உத்வேகத்துடன் செயல்பட அறிவுரை வழங்கினார். மேலும் ஆயுதப்படை பெண் காவலர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.