சென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
காவலர் தின வாழ்த்து தெரிவித்த அனைத்து காவல்துறையினரும், தங்களுக்காக காவலர்கள் தினம் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.
நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியரும், மற்றும் தேசிய காவலர் தின நிறுவனமான திரு. அ. சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, இன்று காவலர் தினத்தை முன்னிட்டு குடியுரிமை நிருபர் பிரிவு சென்னை மாவட்ட தலைவர் திரு. அப்துல் ஹாபிஸ், எஃப் எம் சி ஜி(FMCG) பிரிவு சென்னை மாவட்ட தலைவர் திரு.குமரேசன் மற்றும் வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் திரு.யா.முஹம்மது கௌஸ் (BA,BL) ஆகியோர் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களுக்கு சென்று காவலர் தின வாழ்த்து தெரிவித்தும், காவலர் தின சிறப்பு வருட காலண்டர் வழங்கியும் இனிப்புகள் கொடுத்தும், காவலர் தின வாழ்த்து கூறி காவலர்களை உற்சாகப்படுத்தினர்.
சென்னை எக்ஸ்பிளனேட் காவல் நிலையம், முத்தையால் பேட் காவல் நிலையம், தங்க சாலை காவல் நிலையம், ஏழு கிணறு காவல் நிலையம், கொத்தவால் சாவடி காவல் நிலையம், கொருக்குப்பேட்டை காவல் நிலையம், ஆர் கே நகர் காவல் நிலையம், தண்டையார்பேட்டை காவல் நிலையம், எம் கே பி நகர் காவல் நிலையம், வியாசர்பாடி காவல் நிலையம், புளியந்தோப்பு காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ் காவல் நிலையம், ஓட்டேரி காவல் நிலையம், வெப்பேரி காவல் நிலையம், கீழ்பாக்கம் காவல் நிலையம், அண்ணாநகர் காவல் நிலையம், மீஞ்சூர் காவல் நிலையம், திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி காவல் நிலையம், மணலி காவல் நிலையம், எண்ணூர் காவல் நிலையம், திருவொற்றியூர் காவல் நிலையம், மீன்பிடி துறைமுக காவல் நிலையம், காசிமேடு காவல் நிலையம், ராயபுரம் காவல் நிலையம், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், திருவல்லிக்கேணி காவல் நிலையம், அண்ணா சாலை காவல் நிலையம், தேனாம்பேட்டை காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிக்கப்பட்டது.