சென்னை : சென்னை V3 J.J. நகர் காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு பிரிவில் சரவணகுமார் (37) (2003 Batch) பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பு காரணமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நேற்று இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபொது வழியில் இறந்துவிட்டார் என தகவல் மேற்படி நபரின் பிரேதம் அவரது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெறும் என்று கூறி உள்ளார்கள். காவலரின் குடும்பத்திர்க்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கின்றோம்.