சென்னை : சென்னையில், கடந்த 7 நாட்களில், 24.685 கிலோ கஞ்சா மற்றும் 15 கிராம் மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது.
நொளம்பூரில், சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு, மேற்படி வழக்கில் தொடர்புடைய தந்தை மற்றும் மகன் கைது.
குஜராத்திலிருந்து லாரியில் ஜர்தா புகையிலைப்பொருட்களை கடத்தி வந்த 6 நபர்கள் எம்.கே.பி.நகரில் கைது. 970 கிலோ ஜர்தா புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.
கிண்டி பகுதியில் டைடால் மாத்திரைகள் வைத்திருந்த 3 நபர்கள் கிண்டி காவல் குழுவினரால் கைது. 700 டைடால் மாத்திரைகள் பறிமுதல்.