சென்னை: கடன் டார்ச்சர் செயலி தொடர்பாக சீனர்களை காவலில் எடுத்து சென்னை போலீசார் விசாரிக்கின்றனர். ஆங்கிலத்தில் டைப் செய்து கூகுள் ட்ரான்ஸ்லேஷன் வழியாக சீனமொழிக்கு மாற்றி கேள்வி கேட்கின்றனர். 2 சீனர்கள் உள்பட 4 பேரை 5 நாள் காவலில் எடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை செங்குன்றம் பகுதியில் 4 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்!: 2 பேர் கைது
சென்னை: சென்னை அருகே செங்குன்றம் பகுதியில் 2 பேரிடமிருந்து 4 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய தகவலின் பேரில் பைக்கில் சென்ற 2 பேரை போலீசார் சோதனையிட்ட போது கொக்கைன் சிக்கியது. கைதான சதீஷ், கணேஷ் ஆகியோரை போதைப்பொருளை இலங்கைக்கு கடந்த முயன்றது விசாரணையில் அமலமாகியுள்ளது.
