சென்னை: சென்னை காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பொதுமக்களிடமிருந்து 13 புகார் மனுக்களை பெற்றார். மக்கள் நேரடியாக வழங்கிய புகார்களை கவனமாக கேட்டறிந்த அவர், அந்த மனுக்களின் மீது விரைந்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் அளித்துள்ள புகார்களுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா
















