சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 33 பேர் குணம் அடைந்தனர். சென்னை பெருநகர காவல்துறையில், நேற்று முன்தினம் வரை ஆயிரத்து 550 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 19 பேர் பிடியில் சிக்கினர். சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.சத்தியலிங்கம், செம்பியம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.மார்ட்டின் பிரேம்ராஜ் ஆகியோர் உட்பட 33 காவல்துறையினர் குணமடைந்து பணிக்கு திரும்பினர். இதையடுத்து சென்னை காவல் துறையில் தொற்று பாதிப்பு 1569 ஆகவும், குணமடைந்து பணிக்குத் திரும்பிய காவல்துறையினர் எண்ணிக்கை 1098 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை