சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், 15.12.2021 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய 14 காவல் ஆளினர்கள் மற்றும் 17.12.2021 ம் தேதி பிறந்த நாள் காணும் 15 காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களை இன்று ( 16.12.2021) நேரில் அழைத்து, அவர்களின் பணி இடங்கள் மற்றும் குடும்பத்தினர் பற்றியும், நலம் விசாரித்து, விருப்பங்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் அவர்களிடம் வலியுறுத்தினார். மேலும் தனது வாழ்த்து செய்தியுடன் கூடிய பிறந்த நாள் வாழ்த்து அட்டையையும், சிறப்பு நினைவு பரிசையும், காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள். இத்துடன் பிறந்த நாளன்று அவர்களுக்கு “விடுப்பு” அளிப்பதுடன், “வான்செய்தி” மூலம் சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறையிலிருந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சார்பாக பிறந்த நாள் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்படுகிறது. காவல் ஆணையாளர் அவர்களின் வாழ்த்துகள் மற்றும் வாழ்த்து அட்டைகள் தங்களுக்கு கிடைத்ததினால் சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, காவல் ஆணையாளர் அவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்