சென்னை: சென்னை பெருநகரில் தற்போது பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடிய “கபசுர குடிநீர்” வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகரில் தற்போது பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களுக்கு இந்நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு இன்று (01.04.2020) காலை காவல் ஆணையரகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக் கூடிய “கபசுர குடிநீர்” வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்), திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்), திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப., நுண்ணறிவுப்பிரிவு காவல் துணை ஆணையாளர்கள் திரு.ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., மருத்துவர் திரு.எம்.சுதாகர் மற்றும் காவல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை