தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் காவல் துணை ஆணையர்கள் ஆகியோரை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 51 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
-
சென்னை பெருநகர காவல் உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி.தீபா சத்யன், IPS பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர குற்றப்பிரிவு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் திரு.ராஜேந்திரன், சென்னை பெருநகர குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை பெருநகர குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு.ஸ்டீபன் யேசு பாதம், சென்னை சி.ஐ.டி.சிறப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் திரு.சிபி சக்கரவர்த்தி, சென்னை நிர்வாக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை நிர்வாக ஏஐஜி முத்தரசி, சென்னை கணினிமயமாக்கல் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை கணினிமயமாக்கல் பிரிவு துணை ஆணையர் திரு. விக்ரமன், அடையாறு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர் திருமதி.நிஷா, சென்னை அம்பத்தூர் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
விரிவாக்கம் பிரிவு ஏஐஜி திரு.பாலகிருஷ்ணன், மாதவரம் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
நெல்லை வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரிஹரன் பிரசாத், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று திநகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாத், சென்னை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையர் திரு. என் குமார் பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன், சென்னை வணிக குற்றத்தடுப்பு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் கிழக்கு திரு.பெரோஸ்கான், சென்னை நிர்வாக துணை ஆணையராக நிர்வாகம் மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை காவல் நிர்வாக துணை ஆணையர் திரு.செந்தில்குமார், சென்னை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் கிழக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் திரு.மனோகர், சென்னை காவல் காவலர் நலன் உதவி காவல்துறை தலைவராக (ஏ.ஐ.ஜி) மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை காவலர் நலன் ஏ.ஐ.ஜி திரு. அதிவீரபாண்டியன், கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை தி.நகர் துணை ஆணையர் திரு.அசோக்குமார், சென்னை தலைமைச் செயலகப் பிரிவு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை சைபர் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.சேசாங் சாய், மயிலாப்பூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோயில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ஜவகர் பதவி உயர்வு பெற்று, சென்னை பெருநகர காவல் அண்ணாநகர் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
மதுரை மாநகர காவல் துணை ஆணையர் திரு.கார்த்திக், சென்னை பெருநகர பூக்கடை காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்
-
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அடையாறு துணை ஆணையர் திரு.பகலவன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
மாதவரம் துணை ஆணையர் ரவளி பிரியா, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
-
சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் திரு. பாலாஜி சரவணன், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி மாற்றப்பட்டுள்ளார்.
-
திருப்பூர் சட்டம்-ஒழுங்கு எஸ்பி திரு. பத்ரி நாராயணன், கன்னியாகுமரி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
தெற்கு சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் திரு. தங்கதுரை, ஈரோடு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் நாமக்கல் காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் திரு. அருளரசு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆக மாற்றப்பட்டுள்ளார்.
-
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
-
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
திருச்சி எஸ் பி திரு.ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
கள்ளக்குறிச்சி எஸ் பி திரு.ஜெயச்சந்திரன், திருச்சி எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
-
மயிலாப்பூர் துணை ஆணையர் திரு.தேஷ்முக் சேகர், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை உளவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ் அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
துறை சார்ந்த காவல் கண்காணிப்பாளர்கள்
-
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்வரன் புதிதாக உருவாக்கப்பட்ட சென்னை கடற்படை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திருப்பூர் மாநகர தலைமை நிர்வாக காவல் துணை ஆணையர் திரு.பிரகாரன் மதுரை மாவட்ட உணவு பொருள் வழங்கல் உளவு துறை காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை மாவட்ட குற்றப்பிரிவு உளவுதுறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவி, காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை குற்றப்பிரிவு உளவுதுறை -3 காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
இராமநாதபுரம் மாவட்ட தலைமை நிர்வாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கவேலு, மாநில மனித உரிமை ஆணைய காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வுடன் மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை காவல் மாவட்ட வண்டலூர் காவலர் பயிற்சி கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகசாமி, காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, காவலர் பயிற்சி கல்லூரி முதல்வராக மாற்றப்பட்டுள்ளார்.
-
கரூர் மாவட்ட பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தம்பிதுரை பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழு காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை மாவட்ட ஆளுநர் அலுவலக காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.டாங்கர் பவின் உமேஷ், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
துணை ஆணையர்கள்
-
திருவள்ளூர் பொன்னேரி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு. பவன் குமார் ரெட்டி ஆக பதவி உயர்வு பெற்று, திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
மதுரை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி திரு. ஸ்டாலின் கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. சந்திர சேகரன் பதவி உயர்வு பெற்று சேலம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
கோவை மாநகர தலைமை நிர்வாக காவல் துணை ஆணையர் திரு.செல்வகுமார் திருப்பூர் மாநகர தலைமை நிர்வாக காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.குணசேகரன்,காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, கோவைமாநகர தலைமை நிர்வாக காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்
-
சேலம் மாவட்ட பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் குமார் பதவி உயர்வு பெற்று திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
விருதுநகர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரகாத், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று, மதுரை மாநகர காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
-
சென்னை அம்பத்தூர் காவல் துணை ஆணையர் திரு.ஈஸ்வரன், Establishment ஏ.ஐ.ஜி யாக மாற்றப்பட்டுள்ளார்.