கஞ்சா விற்பனை செய்த 3 பெண்கள் உட்பட 5 நபர்கள் கைது
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” –ன் தொடர்ச்சியாக, தொடர்ச்சியாக , P3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில் 13.04.2021 அன்று காலை , வியாசர்பாடி , சுந்தரம் பவர் லைன் அருகில் கண்காணித்தபோது , அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.அந்தோணி , வ / 44 , வியாசர்பாடி 2.சரளி , பெ / வ .38 , வியாசர்பாடி , 3.சுகுணா , பெ / வ .53 , பெரம்பூர் , 4.ஆதிலஷ்மி , பெ / வ .27 , வியாசர்பாடி மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 5 நபர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர் . அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிறுத்தியிருந்த லாரியின் பேட்டரிகளை திருடிய கௌதம் மற்றும் 2 நபர்கள் கைது
முட்டுக்காட்டைச் சேர்ந்த முருகன், வ/36, என்பவர் 05.4.2021 அன்று கடற்கரை சாலை , முட்டுக்காடு அருகேயுள்ள சாகாஸ் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் அவரது லாரியை நிறுத்திவிட்டுச் சென்று, சில மணி நேரங்கள் கழித்து வந்து பார்த்தபோது , அவரது லாரியிலிருந்த 2 பேட்டரிகள் திருடு போயிருந்தது தெரியவந்தது . இது குறித்து முருகன் J-12 கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் வழக்குப் பதிவு செய்து, J12 கானாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியுடன் விசாரணை செய்து, மேற்படி லாரியின் பேட்டரிகளை திருடிய 1.கௌதம், வ/31, பெரும்பாக்கம், 2.அன்பு, வ/40, பெரும்பாக்கம், 3.முருகன், வ/41, பெரும்பாக்கம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து லாரியின் 2 பேட்டரிகள் கைப்பற்றப்பட்டு அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநரை தாக்கி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய அருண்குமார் மற்றும் 4 நபர்கள் H 6 R.K நகர் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன், வ/41, என்பவர் 11.04.2021 அன்று தனது ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றபோது, 10 பேர் கொண்ட கும்பல் பாலமுருகனிடம், வீண் தகராறு செய்து பாலமுருகனின் ஆட்டோ உட்பட 3 ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு பாலகிருஷ்ணனையும் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, H6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.அருண்குமார் , வ/21, பழைய வண்ணாரப்பேட்டை 2.அப்பு (எ) தொங்கு, வ/21, தண்டையார்பேட்டை, 3.கணேசன், வ/21, தண்டையார்பேட்டை, 4.விஜய் (எ) பல்லி தண்டையார்பேட்டை 5.பிரவீன், வ/20, திருவேற்காடு ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 5 கத்திகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,
வேன் கண்ணாடியை உடைத்து சரக்கு வேன் டிரைவரிடம் தகராறு
கீழ்க்கட்டளையைச் சேர்ந்த சபீர், வ/42, என்பவர் 10.04.2021 அன்று அவரது சரக்கு வேனில் அனகாபுத்தூர், JN ரோட்டிலுள்ள ஒரு மளிகைக் கடையின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு, வேலை முடிந்து சரக்கு வாகனத்தை எடுக்க முற்பட்டபோது, 2 நபர்கள் தகராறு செய்ததுடன், சபீரை கையால் தாக்கி, அவரது வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிச் சென்றது தொடர்பாக, சபீர் S6 சங்கர் நகர் காவல் நிலையத்தில்புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து, S6 சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியுடன் மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 1.கோபி (எ) கோபிசங்கர், வ/21, அனகாபுத்தூர், 2.கணேஷ், வ/35, அனகாபுத்தூர் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி-1 கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
