போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ”-ன் தொடர்ச்சியாக, S – 6 சங்கர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 08.03.2021 அன்று மதியம் அனகாபுத்தூர் , பெட்டோல் பங்க் அருகே கண்காணித்து அங்கு குட்கா புகையிலைப்பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த 1.பொன்ராஜ் , வ / 38 , மாங்காடு 2.சுப்பையா , வ / 45 , குரோம்பேட்டை ஆகிய இருவரை கைது செய்தனர் . அவர்களிடமிருந்து 160 கிலோ குட்கா பான் மாசாலா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அலமாதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் M – 4 செங்குன்றம் காவல் குழுவினரால் கைது
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக, M – 4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் 08.03.2021 அன்று மதியம் வடகரை , டான்பாஸ்கோ பள்ளி அருகே கண்காணிப்பு பணியிலிருந்த போது , அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ராஜேஷ் , வ / 34 , அலமாதி என்பவரை கைது செய்தனர் . அவரிடமிருந்து 1கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காரில் குட்கா புகையிலைப்பொருட்கள் கடத்தி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா ( எ ) இளையராஜா என்பவர், J-10 செம்மஞ்சேரி காவல் குழுவினரால் கைது
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ”-ன் தொடர்ச்சியாக, , J – 10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின்பேரில் 8.3.2021 அன்று மதியம் செம்மஞ்சேரி , சுனாமி நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது , அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்த ராஜா ( எ ) இளையராஜா , வ / 25 , தூத்துக்குடி என்பவரை கைது செய்தனர் . அவரிடமிருந்து சுமார் 340 கிலோ குட்கா பான்மசாலா பாக்கெட்டுகள் , மற்றும் 1 கார் கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
