சென்னை : போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பில் சைதாப்பேட்டை, கோதம் மேடு, மயிலாப்பூர், சாந்தோம், ஆழ்வார் திருநகர் பகுதிகளில் கபசுரக் குடிநீர், முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனையொட்டி நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய் கிழமை (21-07-2020)நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் சேர்ந்து அறிவுறுத்திய கொரோனா காய்ச்சலை கட்டுப்படுத்தும் 15 வகை அரிய மூலிகை கொண்டு தயாரிக்கப்பட்ட சித்தமருந்து கபசுர குடிநீர் சமூக இடைவெளி வட்டமிட்டு மக்களை வரிசைப்படுத்தி சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்பு வழங்கப்பட்டது மற்றும் முக கவசமும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையர் திரு. எஸ். அனந்தராமன் ஆகியோர் தலைமை வகித்தார். காவல் உதவி ஆணையர் எஸ். அனந்தராமன் எதிர்ப்பு சக்தி கொண்ட கபசுர குடிநீர், முகக்கவசங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல் உதவி ஆணையர் திரு. அனந்தராமன் அவர்கள் கூடிய பொதுமக்களை மிகுந்த கனிவுடன், தகுந்த சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டில், சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் உதவி ஆணையர் திரு.அனந்தராமன், முக கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
இப்பகுதிகளில் உள்ள மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம். அத்தியாவசியத் தேவைகளை பெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவதால் இந்த கொரோனா வைரஸ் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் பாதுகாக்க முடியும் என்றும்,
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும், சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளிக் கடைபிடிக்க வேண்டும் எனவும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கபசுரக்குடிநீர், ஆர்சானிக் ஆல்பம் மாத்திரைகள் போன்றவைகளை சாப்பிடுதல் போன்றவற்றையும் வலியுத்தி பேசினார். மேலும் இந்த தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.