சென்னை: பணம் வைத்து சூதாடிய வழக்கில் நடிகர் ஷாம் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் நடிகர் ஷாம், தனது வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல் துறையினர் ஷாம் வீட்டில் திடீரென நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அவருடன் 13 பேர் சீட்டு, விளையாடிக் கொண்டு இருந்ததாகவும், அவர்கள் இறந்து சீட்டுகளும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறையினர் அவரை கைது செய்து பின் ஜாமினில் விடுவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் வணிகர்கள், புதிய இயக்குனர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள் என பலர் அடங்குவார்கள் என குறிப்பிடப்படுகிறது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.12B படத்தின் மூலம் அறிமுகமான ஷாம், நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா இயற்கை, உள்ளம் கேட்குமே,6 மெழுகுவர்த்தி உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ் வண்ணாரப்பேட்டை