சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 608 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 608 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
தமிழக காவல்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும் காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் (Tamilnadu Chief Minister’s Constabulary Medal), அந்தந்த காவல் நகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2019ம் ஆண்டுக்கான தமிழக முதலமைச்சர் காவலர் பதக்கங்கள் பெறுவதற்கு, சென்னை பெருநகர காவல்துறையில் 10 ஆண்டுகள் எவ்வித தண்டனையுமின்றி சிறப்பாக பணிபுரிந்த சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை மற்றும் சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் 609 ஆண் மற்றும் பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி 609 காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி 12.02.2020 அன்று எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். உயர்திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் 608 காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பதக்கங்கள் பெற்ற அனைத்து காவலருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்..
நமது குடியுரிமை நிருபர்
S. அதிசயராஜ்
சென்னை