ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட தலைவர்கள் பேசியதாவது முகாசி பிடாரியூர் ஊராட்சியை பேருராட்சியாக தரம் உயர்த்தியதை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தபட்டது. மேலும் பேருராட்சியாக மாற்றினால் 100 நாள் வேலை பறிபோகும் மற்றும் மக்களுக்கு வரி பல மடங்கு உயரும் எனவும் ஊராட்சியை பேருராட்சியாக மாற்றிய அரசானையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தபட்டது. இதில் காங்கயம் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் NSN நடராஜ் முகாசி பிடாரியூர் பஞ்சாயத்து தலைவர் கேபில் நாகராஜ் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என திறளாக கலந்து கொண்டனர். பொது மக்களின் போக்குவத்துக்கு இடையூறு ஏற்படாமால் இருக்க சென்னிமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்