ஈரோடு: கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதனால் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதையடுத்து கரோனா என்னும் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பொது முடக்கம் அமலில் இருக்கும் நிலையில் சென்னிமலை காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில், உதவி ஆய்வாளர் துரைசாமி மற்றும் போலீசார் சென்னிமலையில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் முகக்கவசம் அணியாத சுமார் 50 பேருக்கு தலா ரூ.200 வீதம் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட்ட மளிகை கடைக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.